நாடு முழுவதும் ஆதரவு திரட்ட ராம்நாத் கோவிந்த் சூறாவளி சுற்றுப்பயணம்


நாடு முழுவதும் ஆதரவு திரட்ட ராம்நாத் கோவிந்த் சூறாவளி சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 24 Jun 2017 9:30 PM GMT (Updated: 24 Jun 2017 8:43 PM GMT)

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த், சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்ட தீர்மானித்தார்.

புதுடெல்லி, 

ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்ட தீர்மானித்தார்.

இன்று (25-ந் தேதி) அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். முதலில் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் ஆதரவு திரட்டுகிறார்.

இந்த பயணத்தில் அவருடன் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரியும் செல்கிறார்.

ராம்நாத் கோவிந்த், பெரிய மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், சில இடங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளும் கூட்டணியினரை மட்டுமின்றி, எதிர்க்கட்சியினரையும் அவர் சந்தித்து ஆதரவு கேட்கக் கூடும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

Next Story