விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டம் தயார் - நிதி ஆயோக்


விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டம் தயார் - நிதி ஆயோக்
x
தினத்தந்தி 24 Jun 2017 11:31 PM GMT (Updated: 24 Jun 2017 11:31 PM GMT)

நிதி ஆயோக்கின் உறுப்பினர் ரொமேஷ் சந்த் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தை விவரித்துள்ளார்.

ஷிம்லா

கொள்கை, தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி அம்சங்களில் கவனம் செலுத்தியும், நீர்ப்பாசன வசதிகளை அதிகரித்தும் வருமானத்தை பெருக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வறட்சியான பகுதிகளை விட நீர்ப்பாசன பகுதிகளில் உற்பத்தி இரு மடங்குள்ளது; இந்தியாவின் மொத்த பரப்பில் 45 சதவீதம் நீர்ப்பாசனம் பெற்றுள்ளது என்றார் ரொமேஷ். சுமார் 55 சதவீதப்பகுதிகள் பயிரிட தகுதி வாய்ந்தவை என்றாலும் ஒரு போகும் மட்டுமே விளைகிறது என்றும், 45 பகுதிகளில் 8 மாதங்களுக்கு பயிரிடப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். பலவித பயிர்களை விளைவிப்பது நிலத்தின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் பெருக்கும் என்றார் ரொமேஷ்.  

ஈ - நாம் திட்டத்தின் மூலம் ஒற்றைச் சந்தை கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு தரகர்களின் ஏகபோகம் நீக்கப்பட்டு விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு அதிக வருமானம் ஈட்டும் வழி ஏற்பட்டுள்ளது என்றார் ரொமேஷ். இத்திட்டம் முன்மாதிரியாக கர்நாடகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பெருவெற்றியை பெற்றுள்ளது. விவசாயிகளின் வருமானம் இரண்டு ஆண்டுகளில் 13 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே நாடு முழுதும் நடைமுறைக்குவரவுள்ளது. 

விவசாயத்தில் 45 சதவீத மக்கள்தொகை ஈடுபட்டாலும் வெறும் 17 சதவீத நாட்டு வருமானம் மட்டுமே விவசாயத்தால் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு திறன் பயிற்சி கொடுப்பதன் மூலம் 45 சதவீதமாக வருமானத்தை உயர்த்த திட்டமிடப்படுவதாக அவர் கூறினார். 

பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க பலவிதமான காப்புறுதி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார் ரொமேஷ். 


Next Story