எமர்ஜென்சி காலத்தை நியாபகப்படுத்திய மோடிக்கு ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’ என காங்கிரஸ் பதிலடி


எமர்ஜென்சி காலத்தை நியாபகப்படுத்திய மோடிக்கு ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’ என காங்கிரஸ் பதிலடி
x
தினத்தந்தி 25 Jun 2017 9:27 AM GMT (Updated: 25 Jun 2017 9:27 AM GMT)

எமர்ஜென்சி காலத்தை நியாபகப்படுத்திய பிரதமர் மோடிக்கு இப்போது ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’ நிலவுகிறது என காங்கிரஸ் பதிலடி கொடுத்து உள்ளது.


புதுடெல்லி,


வானொலியில் இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியின் போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை நியாபகப்படுத்தி பேசினார். கடந்த 1975-ம் ஆண்டு இதே நாளில்தான் அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஜனநாயகத்தை காப்பாற்றினார்கள். 1975 ஜூன் 25 ஜனநாயகத்தின் மிகவும் இருண்ட நாளாகும். ஒட்டுமொத்த தேசமும் சிறையாகியது. நீதித்துறையும் முடக்கப்பட்டது.

  ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களை நாம் நியாபகப்படுத்தி பார்க்கவேண்டிய அவசியம் உள்ளது, நேர்மறையான நோக்கத்தை நோக்கி நாம் முன்செல்ல வேண்டும். அடல் பிகாரி வாஜ்பாய் ஜி கூட சிறையில் அடைக்கப்பட்டார். ஜனநாயகத்தின் மீதான நம்முடைய அன்பானது ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும் என பேசினார். 

எமர்ஜென்சி நிலையை நியாபகப்படுத்திய பேசிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி பதிலடியை கொடுத்து உள்ளது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான அரசு தேசத்தில் ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை நிலைநிறுத்த செய்து உள்ளது என சாடிஉள்ளது.

என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராயின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது மற்றும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் மோசமான நிலையை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் டாம் வேதக்கான் பேசுகையில், “ஆம், நாம் எமர்ஜென்சியை மறந்துவிட்டோம், ஆனால் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையானது நாட்டில் நிலவுகிறது. மீடியாக்கள் இலக்காக்கப்படுகிறது, மீடியாக்கள் மீது சோதனைகள் நடக்கிறது, இவைகளை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில்தான் பட்டியலிட முடியும்,” என சாடிஉள்ளார்.

Next Story