அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் அழைப்பு


அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் அழைப்பு
x
தினத்தந்தி 25 Jun 2017 6:27 PM GMT (Updated: 25 Jun 2017 6:26 PM GMT)

இந்தியா வர்த்தகத்திற்கு சாதகமான நாடாக விளங்கி வருவதால் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் மோடி அமெரிக்க முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

வாஷிங்டன்

தனது அமெரிக்க பயணத்தின் முதல் நாளில் முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து உரையாடியபோது தற்போது அமலுக்கு வரவுள்ள ஜிஎஸ்டி பெருத்த மாற்றங்களை உண்டாக்கத்தகுந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் 20 ற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (கூகுள்), ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், சிஸ்கோவின் ஜான் சாம்பர்ஸ், அமேசானின் ஜெஃப் பெஸோஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். கடந்த மூன்றாண்டுகளில் அரசு நேரடி அந்நிய முதலீடு இந்தியா ஈர்த்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்களையும் அவர் எடுத்துரைத்தார்.

நடைமுறைக்கு வரவுள்ள ஜி எஸ் டி அமெரிக்க வணிகக்கல்வி நிறுவனங்களில் ஒரு பாடமாக இருக்கக்கூடிய ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

இன்று உலகில் மாறிவரும் சூழலில் இரு நாடுகளுக்கும் ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இரு நாடுகளின் வர்த்தகம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கிட்டத்தட்ட அமெரிக்க டாலர்கள் 110 பில்லியன்கள் அளவிற்கு 2015 ஆம் ஆண்டில் உயர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளும் தங்களின் ஒழுங்குமுறை மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்பை இணைத்து முதலீட்டையும், வர்த்தகத்தையும் உயர்த்த வாய்ப்புள்ளது என்றும் இரு நாட்டு வர்த்தக அமைப்பான யூ எஸ் ஐ பி சி தெரிவித்தது.


Next Story