பள்ளிகளை கலந்து ஆலோசிக்காமல் ‘பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தமாட்டோம்’ சி.பி.எஸ்.இ அறிவிப்பு


பள்ளிகளை கலந்து ஆலோசிக்காமல் ‘பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தமாட்டோம்’ சி.பி.எஸ்.இ அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2017 8:34 PM GMT (Updated: 25 Jun 2017 8:34 PM GMT)

மத்திய கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் தவறு

புதுடெல்லி,

மத்திய கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் தவறு நிகழ்வதாக சி.பி.எஸ்.இ.க்கு அடிக்கடி புகார்கள் வந்தன. எனவே இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த குழுக்கள் விசாரணை நடத்தி சி.பி.எஸ்.இ.க்கு அளித்த பரிந்துரையில், 10 மற்றும் 12–ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளை பிப்ரவரி மாதத்திலேயே நடத்துமாறு கூறப்பட்டு இருந்தது. இது குறித்து சி.பி.எஸ்.இ.யும் பரிசீலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு பள்ளிகள் தரப்பில் இருந்து கவலை தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முன்கூட்டி பொதுத்தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது. தரமான விடைத்தாள் மதிப்பீட்டுக்காகவே இந்த திட்டம் பரிசீலிக்கப்படுவதாக கூறிய வாரிய அதிகாரி ஒருவர், எனினும் இது குறித்து பள்ளிகள் மற்றும் வாரியத்துடன் தொடர்புடையவர்கள் அனைவருடனும் கலந்து ஆலோசிக்காமல் இதில் முடிவு எதுவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.


Next Story