உத்தரகாண்ட்: டேராடூன் - ஹரித்வார் இடையே மெட்ரோ ரயில் - முதல்வர் அறிவிப்பு


உத்தரகாண்ட்: டேராடூன் - ஹரித்வார் இடையே மெட்ரோ ரயில் - முதல்வர் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2017 9:00 PM GMT (Updated: 25 Jun 2017 9:00 PM GMT)

தனது அரசின் நூறாவது நாள் கொண்டாட்டத்தின் போது டேராடூன் - ஹரித்வார் இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்தார்.

டேராடூன்

தலைநகர் டேராடூனிலிருந்து இந்துக்களின் புனிதத் தலமான ஹரித்வாருக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. “ டேராடூனில் அதிகரித்து வரும் போக்குவரத்தை கருத்திற் கொண்டு ஹரித்வார் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக திட்ட இயக்குநர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்” என்றார் திரிவேந்திர சிங் ராவத்.

டேராடூன் - டெல்லி இடையேயான ரயில் பயண நேரம் முசாஃபர்நகர் - தியோபந்த் - ரூர்க்கி இடையையேயான ரயில்பாதை கட்டுமானம் முடிவடைந்தவுடன் குறையும் என்றார் முதல்வர்.

“தற்போது சஹரன்பூர் வழியே செல்லும் ரயில்கள் தங்கள் பயணத்தை இரண்டு மணி நேரம் வரை குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு அமையவுள்ளது” என்றார் முதல்வர் ராவத்.

சுற்றுலா நகரங்களான டேராடூன், ஹரித்வார் மற்றும் ஹல்த்வானி ஆகியவற்றில் உள்வட்டச் சாலைகளை அமைக்க ஏற்கனவே மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அனுமதியளித்துள்ளார் என்றார் முதல்வர். மேலும் சுற்றுலா பயணம் அதிகம் இருக்கும்போது கடுமையான போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க புதிய டேராடூன் ஹாதிபாவோன் இடையே புதிய சாலை ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.


Next Story