கோவா: கோவா சுரக்‌ஷா மன்ச் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்


கோவா: கோவா சுரக்‌ஷா மன்ச் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்
x
தினத்தந்தி 25 Jun 2017 11:35 PM GMT (Updated: 25 Jun 2017 11:35 PM GMT)

கோவாவின் கோவா சுரக்‌ஷா மன்ச் 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

பனாஜி

அதன் தலைவர் ஆனந்த் ஷிரோத்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “ நாங்கள் இரண்டு கோவா தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறோம். எங்கள் கட்சிக்கு கோவாவில் ஏராளமான ஆதரவுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு 10,500 வாக்குகளை வாங்கினோம். கோவாவின் 40 தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் 80,000 முதல் 1,00,000 வாக்களர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். வெற்றி பெற பொருத்தமான உத்தியை வகுப்போம்” என்றார் அவர்.  

அக்கட்சி சிவசேனா, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. எதிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் ஷிரோத்கர் ”நாங்கள் பாஜகவின் பலத்தை 21 தொகுதிகளிலிருந்து 13 தொகுதிகளாக குறைத்தோம்; அந்த நற்பெயர் எங்களிடமே சேர வேண்டும்” என்றார். 

தற்போது வரவுள்ள இரு சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சி போட்டியிடவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story