துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு மீது காங்கிரஸ் சரமாரி புகார்


துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு மீது காங்கிரஸ் சரமாரி புகார்
x
தினத்தந்தி 24 July 2017 11:15 PM GMT (Updated: 24 July 2017 8:25 PM GMT)

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பா.ஜனதா சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

‘‘நெல்லூர் மாவட்டத்தில் ஏழைகளுக்காக வழங்கப்பட்ட நிலத்தை அபகரித்து கொண்டார். அவர்கள் எதிர்த்து போராடியதால் மீண்டும் நிலத்தை ஒப்படைத்தார். எதிலும் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கூறும் வெங்கையா நாயுடு இந்த முறைகேடு குறித்து விளக்கம் அளிக்கவேண்டும். இதேபோல் அவருடைய மகன் மற்றும் தெலுங்கானா முதல்–மந்திரி மகன் ஆகியோருக்கு சொந்தமான வாகன நிறுவனங்களுக்காக 2014–ம் ஆண்டு டெண்டர் விடாமல் மாநில அரசு 271 கோடி ரூபாய்க்கு வாங்க உத்தரவிட்டது பற்றியும் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வெங்கையா நாயுடு கூறும்போது, ‘‘இதற்கெல்லாம் ஏற்கனவே பதில் கூறிவிட்டேன். நில விவகாரம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. எனவே இந்த தேர்தலிலும் இந்த பிரச்சினைகளை எழுப்பினால், அதனால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது’’ என்று தெரிவித்தார்.


Next Story