சிறுபான்மையினர் திட்டங்களை சரிவர விளம்பரப்படுத்தவில்லை எனக் கண்டிப்பு


சிறுபான்மையினர் திட்டங்களை சரிவர விளம்பரப்படுத்தவில்லை எனக் கண்டிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2017 12:44 PM GMT (Updated: 13 Aug 2017 12:44 PM GMT)

சிறுபான்மையினருக்கான திட்டங்களை சரிவர விளம்பரப்படுத்தவில்லை என நாடாளுமன்ற நிலைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுடெல்லி

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் இந்த விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 50 கோடியில் ரூ. 28.92 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என இந்த நிலைக்குழு கூறியுள்ளது. சரிவ விளம்பரப்படுத்தாதது எந்த நோக்கத்திற்காக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அது நிறைவேறவில்லை என தனது அறிக்கையில் நிலைக்குழு கூறியுள்ளது.

இந்த திட்டங்கள் ஏற்படுத்திய சாதகமான அம்சங்கள் மீதான் ஆய்வும் சில நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றையும் இணைத்து அடுத்து வரும் ஆண்டுகளில் திட்டங்களை சிறப்பாக கொள்கை வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

ஏற்கனவே சச்சார் கமிட்டியின் பரிந்துரையின்படி பல்லூடக விளம்பரங்களை தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து பல விளம்பரங்களை தொலைக்காட்சிகள், வானொலி போன்ற ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

பிரதமரின் 15 அம்சத் திட்டம் குறித்து அரசு ஊடக நிறுவனமான பிஐபியும் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறது. 


Next Story