மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி


மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி
x
தினத்தந்தி 17 Aug 2017 12:10 PM GMT (Updated: 17 Aug 2017 12:14 PM GMT)

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை   ஏழு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 148 வார்டுகளில் 140 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கைப்பற்றியது. பாரதீய ஜனதா 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இடது சாரிகள் கூட்டணியுடன் போட்டியிட்ட பார்வர்டு பிளாக் கட்சி  ஒரு இடங்களிலும் சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 

இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து வெற்றியை தக்க வைத்து வருகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. அது முதல், உள்ளாட்சி தேர்தல் களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற 7 நகராட்சி தேர்தலில் 4 நகராட்சிகளில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

Next Story