அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட கர்ப்பிணி பெண் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் கணவர் புகார்


அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட கர்ப்பிணி பெண் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் கணவர் புகார்
x
தினத்தந்தி 17 Aug 2017 12:16 PM GMT (Updated: 17 Aug 2017 12:16 PM GMT)

உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சஹாராபூரைச் சேர்ந்தவர் முனாவர் இவர் நிறைமாத கர்ப்பிணி ஆவார். இவரது கணவர் ரிக்‌ஷா வண்டி ஒட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி முனாவருக்கு திடீரென பிரசவலி ஏற்பட்டுள்ளது.  பிரசவத்திற்காக சஹாராபூர் அரசு மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென நேற்று நள்ளிரவு அவர் எந்த சிகிச்சையும் பெறாமலேயே நிறைமாத கர்ப்பிணி பெண் என்று பார்க்காமல் அந்த மருத்துவமனையில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். இதனால் செய்துவது தெரியாமல்  முனாவர் கணவர் ரிக்‌ஷா வண்டியில் ஏற்றிக்கொண்டு வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுகொண்டிருக்கும் போது செல்லும் வழியிலேயே அழகான ஆண் குழந்தையை அந்த பெண் பெற்றெடுத்தார். தற்போது முனாவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story