பள்ளியில் மாணவர்கள் முன்பே ஆசிரியைக்கு தீ வைத்து கொளுத்திய நபர் அலறி அடித்து ஓடிய மாணவர்கள்


பள்ளியில் மாணவர்கள் முன்பே ஆசிரியைக்கு தீ வைத்து கொளுத்திய நபர் அலறி அடித்து ஓடிய மாணவர்கள்
x
தினத்தந்தி 17 Aug 2017 1:28 PM GMT (Updated: 17 Aug 2017 1:27 PM GMT)

பெங்களூரில் மாணவர்கள் முன்பே பள்ளி ஆசிரியைக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மகடி தாலுக்காவில் அமைந்துள்ள பள்ளியில் சுனந்தா (வயது 50) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் 5 வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தை நடத்திகொண்டு வரும் போது மர்ம நபர் ஒருவர் திடீரென வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் சுனந்தாவிடம் பேசிகொண்டிருந்தார். அப்போது திடீரென இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. 

இந்த நிலையில் அந்த நபரை வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு அவர் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்மநபர் தான் வைத்து இருந்த மண்ணெண்ணையை ஆசிரியர் சுனந்தா மீது ஊற்றி விட்டு தீ வைத்து தப்பி ஓடிவிட்டார்.

இதனை பார்த்து கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து வகுப்பறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் வலியால் அலறி துடித்த ஆசிரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,  50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story