தேசிய மாநாடு ரோஹிங்கிய முஸ்லிம்களை வெளியேற்றுவதை ஆதரிக்கிறது


தேசிய மாநாடு ரோஹிங்கிய   முஸ்லிம்களை வெளியேற்றுவதை  ஆதரிக்கிறது
x
தினத்தந்தி 20 Aug 2017 6:35 PM GMT (Updated: 20 Aug 2017 6:35 PM GMT)

மியான்மர் ரோஹிங்கியா மக்களை காஷ்மீரிலிருந்து வெளியேற்றுவதை தேசிய மாநாடு ஆதரிக்கிறது என்று அக்கட்சி கூறியுள்ளது.

ஜம்மு

ரோஹிங்கியாக்கள் மட்டுமின்றி பங்களாதேஷ்சின் அகதிகளையும் வெளியேற்றத்தை அக்கட்சி எதிர்க்கவில்லை எனவும் கட்சியின் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தேவேந்திர ராணா தெரிவித்தார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகின்ற பாஜக இது பற்றி  அக்கறை கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் மக்களை தூண்டிவிட்டு உணர்ச்சிகளை கிளப்புகிறது என்று ராணா குற்றஞ்சாட்டினார். இவ்விஷயத்தில் தேசிய மாநாட்டு கட்சி “மௌனமாக” இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியிருந்ததற்கு பதிலளிக்கும் வகையில் ராணா பேசியுள்ளார். 

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா சட்டப்பிரிவு 35 ஏ நீக்கப்பட பாஜக முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு பதிலடியாக ஜிதேந்திரா சிங் முதலில் 10-15 ஆண்டுகளாக காரணம் இன்றி இங்கே தங்கியுள்ள அயல்நாட்டவரை பற்றி விவாதத்தை துவங்கலாம் என்று கூறியிருந்தார். இவர்கள் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் இங்கு அகதிகளாக வந்தனர். ஆனால் இங்கு இந்திய குடியுரிமை பெற்றவர்கள் வந்து குடியேறுவதைப் பற்றி குறைகூறுகிறது தேசிய மாநாட்டுக் கட்சி என்று ஜிதேந்திரா கூறினார். 

இக்குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லவே ராணா தேசிய மாநாட்டு கட்சி ரோஹிங்கியா முஸ்லிம்களின் வெளியேற்றத்தை ஆதரிக்கிறது என்றுள்ளார். ஆனால் இந்த விஷயத்தையும் 35-ஏ சட்டப்பிரிவின் நீக்கத்தையும் பாஜக ஒன்றாக இணைக்கிறது என்றார் ராணா. 


Next Story