எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் ட்வீட் பதிவு


எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை   வலியுறுத்தி பகுஜன் சமாஜ் ட்வீட் பதிவு
x
தினத்தந்தி 20 Aug 2017 8:29 PM GMT (Updated: 20 Aug 2017 8:29 PM GMT)

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது.

புதுடெல்லி

அந்த டிவீட்டில் இடம் பெற்றுள்ள சுவரொட்டி ஒன்றில் உ.பி. மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் படம் இடம் பெற்றுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை கூட்டியுள்ளது.

சமீபத்திய மாநில பேரவைத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவர் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீரா குமாரை நிறுத்தினர். துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இது தொடர்ந்தது. என்றாலும் இரண்டிலும் தோல்வியே கிட்டியது. இப்போது அவர்கள் அடுத்து வரும் 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலை கவனத்தில் வைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உ.பி. மாநிலத்தில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த சமஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்றாக செயல்படும் சூழல் உருவாகியுள்ளது.

பகுஜன் கட்சி வெளியிட்டுள்ள படத்தில் சோனியா காந்தி, மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா, ஷரத் யாதவ், லாலு, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள வாக்கியத்தில், சமூக நீதியை நோக்கி ஓரடி முன்னால் - எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முயற்சி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 

பிகாரில் நிதிஷ் பாஜகவுடன் இணைந்துள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகிய ஷரத் யாதவ் துவங்கியுள்ள இயக்கத்தினையொட்டியே பகுஜன் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஷரத் யாதவ் 17 எதிர்க்கட்சிகள் இடம் பெற்ற கூட்டத்தையும் நடத்திக் காட்டினார். மேற்கு வங்க முதல்வர் மமதாவும் பாஜகவிற்கு எதிராக ஓர் இயக்கத்தைத் துவங்கியுள்ளார்.


Next Story