ஐதராபாத் சினிமா தியேட்டரில் தேசிய கீதத்துக்கு அவமரியாதை; 3 காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு


ஐதராபாத் சினிமா தியேட்டரில் தேசிய கீதத்துக்கு அவமரியாதை; 3 காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Aug 2017 3:29 AM GMT (Updated: 21 Aug 2017 3:29 AM GMT)

ஐதராபாத்தில் சினிமா தியேட்டரில் தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்த 3 காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஐதராபாத், 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திரா நகரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 20 வயதுள்ள 3 பேர் ஒரு இந்தி படம் பார்க்க சென்றனர். அவர்கள் 3 பேரும் அங்குள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். தியேட்டரில் படம் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது அனைவரும் எழுந்து நிற்க, காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. இதுதொடர்பாக தியேட்டர் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 3 மாணவர்கள் மீதும் தேச கவுரவத்தை அவமானப்படுத்துவதை தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story