முத்தலாக் சட்டவிரோதம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது - பிரதமர் மோடி


முத்தலாக் சட்டவிரோதம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 Aug 2017 8:44 AM GMT (Updated: 22 Aug 2017 8:44 AM GMT)

முத்தலாக் சட்டவிரோதம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,


முத்தலாக் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்திவந்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, இஸ்லாமியர்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்ட அங்கீகாரமற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என தீர்ப்பு கூறியது.

 முத்தலாக் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பெண்கள் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. 

முத்தலாக் சட்டவிரோதம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது பிரதமர் மோடி என கூறிஉள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்லாமிய பெண்களுக்கு சமவாய்ப்பு மற்றும் அதிகாரம் அளிக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது,” என குறிப்பிட்டு உள்ளார். 

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா, “முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.... இஸ்லாமிய பெண்களுக்கான சம உரிமை, அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்,” என கூறிஉள்ளார். 

Next Story