மற்ற இரு தலாக் முறைகள் பாலின நீதிக்கு சவாலானது: ப. சிதம்பரம்


மற்ற இரு தலாக் முறைகள் பாலின நீதிக்கு சவாலானது:  ப. சிதம்பரம்
x
தினத்தந்தி 23 Aug 2017 10:49 AM GMT (Updated: 23 Aug 2017 10:52 AM GMT)

முத்தலாக் முறை சட்டவிரோதம் என்ற போதிலும், மற்ற இரு தலாக் முறைகள் தொடர்ந்து இருப்பது பாலின சமத்துவத்திற்கு சவாலானது என ப. சிதம்பரம் டுவிட்டரில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

முஸ்லிம்கள் இடையே விவாகரத்து பெறுவதற்காக கூறப்படும் முத்தலாக் (தலாக்-இ-பிதாத்) விவகாரத்தில் சுப்ரீம்
 
கோர்ட்டு நேற்று வழங்கிய வரலாற்று தீர்ப்பில், முத்தலாக் முறை சட்டவிரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது என தெரிவித்திருந்தது.

எனினும், விவாகரத்து பெறுவதில் உள்ள மற்ற இரு முறைகளான தலாக் ஆஹ்சான் (பிரிந்ததும் ஒரே முறையில் அறிவித்தல்) மற்றும் தலாக் ஹசன் (3 தொடர்ச்சியான மாதங்களில் தலா 3 அறிவித்தல்கள்) ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

இந்நிலையில், முன்னாள் மத்திய உள்துறை மந்திரி கூறும்பொழுது, உண்மையான குரானின் சட்டபூர்வ விதிகளுக்கு எதிரானது முத்தலாக் முறை.  சுப்ரீம் கோர்ட்டு அதனை அரசியலமைப்பிற்கு எதிரானது என அறிவித்தது நன்று என தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று தெளிவு கிடைத்து விட்டது.  முத்தலாக் முறை சட்டவிரோதம்.  மற்ற இரு முறைகளும் பாலின நீதி மற்றும் பாலின சமத்துவத்திற்கு சவாலானது என தெரிவித்துள்ளார்.

அவர் மற்றொரு டுவிட்டர் செய்தியில், பெரும்பான்மையான தீர்ப்பு, பாலின நீதி மற்றும் கணவன் மற்றும் மனைவி இடையே சமத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.


Next Story