இந்தியாவில் உள்ள 14 போலி சாமியார்கள் பட்டியல் துறவிகளின் தலைமை பீடம் வெளியிட்டது


இந்தியாவில் உள்ள 14 போலி சாமியார்கள் பட்டியல் துறவிகளின் தலைமை பீடம் வெளியிட்டது
x
தினத்தந்தி 11 Sep 2017 11:30 PM GMT (Updated: 11 Sep 2017 9:13 PM GMT)

இந்தியாவில் உள்ள முக்கிய போலி சாமியார்கள் 14 பேரின் பட்டியல் வெளியிடப் பட்டது.

அலகாபாத், 

இந்தியாவில் உள்ள துறவிகளின் தலைமை பீடமாக கருதப்படும் அகில இந்திய அகாரா பரிஷத் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்தது. கூட்ட முடிவில் இந்தியாவில் உள்ள முக்கிய போலி சாமியார்கள் 14 பேரின் பட்டியல் வெளியிடப் பட்டது.

சமீபத்தில் பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம், அசாராம் பாபு, ராதே மா, சச்சிதானந்தகிரி, பாபா ஓம், நிர்மல்ஜித் சிங், இச்சாதாரி பீமானந்த், சாமி அசீமானந்தா, ஓம் நமசிவாய் பாபா, நாராயண் சாய், ராம்பால், ஆச்சார்யா குஷ்முனி, பிரகஸ்பதி கிரி, மல்க்கான் சிங் ஆகியோர் பெயர்கள் வெளியிடப்பட்டது.

இந்த போலி சாமியார்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில முதல்-மந்திரிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து செழிப்புடன் வசித்துவரும் இவர்களால் இந்து மதத்திற்கு இழிவு ஏற்படுகிறது. கும்பமேளா போன்ற விழாக்களில் இவர்கள் பங்கேற்க கூடாது என்று அந்த அமைப்பின் தலைவர் மகந்த் நரேந்திரகிரி தெரிவித்தார். கூட்டம் நடப்பதற்கு முன்னதாக நரேந்திரகிரிக்கு ஒரு மர்மநபரிடம் இருந்து மிரட்டலும் வந்தது. 

Next Story