ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது


ரெயிலில் முன்பதிவு செய்து   பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள  அட்டை ஆகிறது
x
தினத்தந்தி 14 Sep 2017 12:00 AM GMT (Updated: 13 Sep 2017 10:51 PM GMT)

ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்கிறவர்கள் அடையாள அட்டையாக மொபைல் ஆதாரை பயன்படுத்தலாம் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி

இதற்காக ஆதார் அடையாள அட்டையை வழங்குகிற ‘யுஐடிஏஐ’ அமைப்பு, ‘எம்ஆதார்’ என்னும் மொபைல் செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது.

பயணிகள் தங்களது செல்போனில், இந்த எம்.ஆதார் செயலிக்கு போய் ஆதார் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதார் அடையாள அட்டை பதிவின்போது தெரிவிக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணில்தான் இந்த ஆதார் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்.
ரெயில் பயணத்தின்போது, ரெயில் டிக்கெட் பரிசோதகரிடம் தங்களது செல்போனில் ‘எம்ஆதார்’ மொபைல் செயலிக்கு போய், பாஸ்வேர்டு பதிவு செய்தால் அதில் வருகிற ஆதார் அடையாள அட்டையை காட்டலாம்.

இது ரெயிலில் எல்லா வகுப்பு முன்பதிவு பயணங்களுக்கும் பொருந்தும்.


Next Story