அகமதாபாத்- மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது


அகமதாபாத்- மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
x
தினத்தந்தி 14 Sep 2017 4:57 AM GMT (Updated: 14 Sep 2017 4:57 AM GMT)

இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இணைந்து துவங்கி வைத்தனர்.

அகமதாபாத்,

மும்பைக்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் என்ற பெருமையை பெறுகிறது. 

 இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அகமதாபாத்தில்  இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி-ஷின்சோஅபே ஆகிய இருவரும் இணைந்து புல்லெட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர். மும்பை-அகமதாபாத் இடையிலான 508 கி.மீ. தூரத்தை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் ரூ.1 லட்சத்து 10ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும். 

இதில் ஜப்பான் ரூ.88 ஆயிரம் கோடி ரூபாயை 0.1 சதவீதம் என்ற மிகவும் குறைவான வட்டியில் கடன் கொடுக்கிறது. இதை 50 ஆண்டுகளில் 15 ஆண்டு சலுகை காலத்துடன் திருப்பிச் செலுத்த வேண்டும். புல்லெட் ரயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, இரு தலைவர்களும் விழா நிகழ்ச்சியில்  உரையாற்றினர். 

Next Story