இந்தியா- ஜப்பான் இணைந்து பணியாற்றினால் முடியாதது எதுவும் இல்லை: ஜப்பான் பிரதமர் பேச்சு


இந்தியா- ஜப்பான் இணைந்து பணியாற்றினால் முடியாதது எதுவும் இல்லை: ஜப்பான் பிரதமர் பேச்சு
x
தினத்தந்தி 14 Sep 2017 5:35 AM GMT (Updated: 14 Sep 2017 5:35 AM GMT)

இந்தியா- ஜப்பான் இணைந்து பணியாற்றினால் முடியாதது எதுவும் இல்லை என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.

அகமதாபாத்,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் இணைந்து புல்லெட் ரயில் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நமஸ்கார் என கூறி தனது உரையை துவங்கினார்.  

தொடந்து அவர் பேசியதாவது:-   இந்தியா ஜப்பன் உறவில் மிக முக்கியமான நாள். தொலைநோக்கு பார்வையுடன் மோடி திட்டங்களை அமல்படுத்துகிறார். இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு புல்லெட் ரயில் திட்டம் அடையாளமாக விளங்குகிறது. 

அடுத்த முறை இந்தியா வரும் போது  மோடியுடன் இணைந்து  புல்லெட் ரயிலில் இணைந்து பயணிக்க விரும்புகிறேன். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்ய ஜப்பான் ஆர்வமாக உள்ளது.  இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்றினால் முடியாதது என எதுவும் இல்லை. குஜராத்& இந்தியாவை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தியாவுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் நான் செய்வேன். 

ஜப்பானில் புல்லெட் ரயில் திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து எந்த ஒரு விபத்தும் நடைபெறவில்லை. புல்லெட் ரயில் தொழில்நுட்பம் இந்திய ரயில்வே அமைப்புக்கு எவ்வாறு உதவும் என்பதை ஜப்பான் அறிந்துள்ளது. உலகாளாவிய உற்பத்தி முனையமாக இந்தியா உள்ளது.ஜப்பான் போல இந்தியாவும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும். இந்தியாவுக்கு பாதுகாப்பான பயணம் அளிக்க உறுதியளிக்கிறோமம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story