சீனாவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியா முன்னேற வேண்டும்: ராகுல் காந்தி


சீனாவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியா முன்னேற வேண்டும்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 20 Sep 2017 6:46 AM GMT (Updated: 20 Sep 2017 6:46 AM GMT)

சீனாவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியா முன்னேற வேண்டும் என்று அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசினார்.


வாஷிங்டன்,

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அந்நாட்டில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது, ராகுல் காந்தி கூறியதாவது:- “சீனாவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியா முன்னேற வேண்டும். தொழிற்துறையில் சீனா சரியான தொலைநோக்கு பார்வையுடன் அதிவேகமாக முன்னேறி வருகிறது. பாலின சமத்துவத்தை பொறுத்தவரையில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. இந்திய அரசியலில் தலைதூக்கியுள்ள பிரிவினை கருத்துக்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. தொழிற்துறையில் சீனாவைப்போன்ற பார்வை இந்தியாவுக்கு உள்ளதா? 

மக்களை எப்போதும் அரவணைத்து செல்வதே இந்தியாவின் பலம் ஆகும். எனவே நாம் நமது சொந்த மக்களை அன்னியப்படுத்தினால், சமூக விரோதிகளுக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் உள்ள மையப்பிரச்சினை என்னவெனில் பிரிவினைவாத அரசியல்தான். இதன்மூலம் மக்களுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்த முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.

Next Story