ஜி எஸ் டி: முன் வரி செலுத்திய தொகை ரூ. 12,000 கோடி மட்டுமே - மத்திய அரசு


ஜி எஸ் டி: முன் வரி செலுத்திய தொகை ரூ. 12,000 கோடி மட்டுமே - மத்திய அரசு
x
தினத்தந்தி 22 Sep 2017 2:40 PM GMT (Updated: 22 Sep 2017 2:40 PM GMT)

வணிகர்கள் ஜி எஸ் டி வரியில் முன் வரியாக ரூ 65,000 கோடியை கோரியதில் உண்மையாகவே அதற்கான தகுதி வாய்ந்தத் தொகை ரூ 12,000 கோடி மட்டுமே என்று மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி

முந்தைய வரி அமைப்பிலிருந்து ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்த ஜி எஸ் டி வரி அமைப்பிற்கு மாறிய போது செலுத்திய வரித் தொகையிலேயே வணிகர்கள் முன் வரியாக ரூ 65,0000 கோடியை செலுத்தி         விட்டதாக  கோரியிருந்தனர்.

வணிகர்கள் ஜூலை மாதம் துவங்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை கட்டும் போது ஏற்கனவே கட்டிய வரித்தொகையை கழித்துக் கொண்டு மீதமுள்ள வரியை கட்டலாம் என்று கூறப்பட்டது. அதன்படி ரூ 65,000 கோடியை ஏற்கனவே கட்டிய வரியாக வணிகர்கள் தங்களது வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது குறிப்பிட்டனர். சுமார் 46 லட்சம் வணிகர்களிடமிருந்து மொத்தம் வசூலான தொகை ரூ. 95,000 கோடியாக இருந்த நிலையில் வணிகர்கள் ரூ 65,000 கோடியை வரி கழித்தம் செய்யக் கோரியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்திய அரசு வரி கழித்தம் செய்யத் தகுதியானத் தொகை ரூ 12,000 கோடி மட்டுமே என்று கூறியுள்ளது. இது தொடர்பான கோரிக்கைகளை அரசு உன்னிப்பாக பரிசீலித்தப் பிறகு இம்முடிவிற்கு வந்ததாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இப்படி அதிகமானதொரு தொகையை முன்வரியாக கோரியிருந்தாலும் அரசின் வரி வருவாய் குறையாது என்று நிதியமைச்சகம் தெரிவித்தது. பெரும்பாலான வணிகர்கள் தாங்கள் ஏற்கனவே செலுத்தியுள்ள வாட் வரி, உற்பத்தி வரி போன்றவற்றை முன் வரி செலுத்தியாக கோரியுள்ளதாகவும், ஒரு சிலர் தவறுதலாக கூட இவ்வாறு கோரியிருக்கலாம் என்றும் விளக்கமளித்தார் அந்த அதிகாரி.

மேலும் இவ்வாறு ரூ. 65,000 கோடியை முன்வரியாக கோரியது நம்ப முடியாத அளவிற்கு அதிகமானதல்ல என்றும் ஜூலை 30, 2017 அன்றைய கணக்குப்படி ரூ 1.27 லட்சம் கோடி மத்திய உற்பத்தி வரி மற்றும் சேவை வரி இறுதி வரவாக கணக்கு வைக்கப்பட்டுள்ளது என்று அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

முன் வரியாக கோரப்பட்டுள்ள சில தொகைகள் குறித்து வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த விஷயம் குறித்து மத்திய நேரடி வரி வாரிய அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.


Next Story