2019–ம் ஆண்டு மார்ச் மாதம்வரை வட்டி மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் நீட்டிப்பு


2019–ம் ஆண்டு மார்ச் மாதம்வரை வட்டி மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் நீட்டிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2017 10:45 PM GMT (Updated: 22 Sep 2017 7:51 PM GMT)

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா, மும்பையில் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு பேசினார்.

மும்பை,

நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (நகர்ப்புறம்)’ திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் வட்டி மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா, மும்பையில் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘‘நடுத்தர வருவாய் பிரிவினர் வீடுகள் கட்டிக்கொள்வதற்கு வட்டி மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம், 2019–ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மேலும் 15 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்’’ என்று கூறினார்.

இந்த திட்டத்தின்கீழ் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்கள், ரூ.9 லட்சம் கடன் வாங்கி, 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்துவதற்கு மத்திய அரசு 4 சதவீதம் வட்டி மானியம் தருகிறது.

இதே போன்று ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையில் உள்ளவர்கள் 3 சதவீத வட்டி மானியம் பெறலாம்.


Next Story