மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை


மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 25 Sep 2017 4:45 AM GMT (Updated: 25 Sep 2017 4:44 AM GMT)

மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு மொபைல் போனுக்கும் 15 இலக்கங்கள் கொண்ட தனிப்பட்ட ஐஎம்இஐ(IMEI)  அடையாள எண் இருக்கும்.  இது பேட்டரியை பொருத்தும் இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அடையாள எண், சிம் கார்டு ஸ்லாட் உடன் தொடர்புடையது. ஒரே மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தினால் அந்த மொபைல் போன் இரண்டு ஐஎம்இஐ எண்களைக் கொண்டிருக்கும். 

இந்த நிலையில், மொபைல் போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. களவு போன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றி போலி ஐஎம்இஐ எண்ணை பொருத்தி வழங்கப்படுகிறது. பயங்கரவாதிகளும் இந்த வகையில் ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றுவதால் அவரகளை கண்காணிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதை இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

மேலும் மொபைல் போன் திருடு போனால் அதனை முற்றிலும் செயலிழக்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. 


Next Story