கேதர்நாத்தை மறுசீரமைக்க காங்கிரஸ் அரசு என்னை அனுமதிக்கவில்லை பிரதமர் மோடி குற்றச்சாட்டு


கேதர்நாத்தை மறுசீரமைக்க காங்கிரஸ் அரசு என்னை அனுமதிக்கவில்லை பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Oct 2017 10:09 AM GMT (Updated: 20 Oct 2017 10:08 AM GMT)

கேதர்நாத்தை மறுசீரமைக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்னை அனுமதிக்கவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டிஉள்ளார்.

கேதர்நாத்,

கேதர்நாத் சென்று உள்ள பிரதமர் மோடி இன்று அங்குள்ள சிவன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தார். 2013-ம் ஆண்டு பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேதர்நாத்தில் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி இன்று இரண்டு மறுகட்டமைப்பு பணியில் 5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார், அவர் குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேதர்நாத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டினார். 

கோவிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி, பொதுமக்களுக்கு சேவையாற்றுவது, கடவுளுக்கு செய்யும் சேவையாகும் என கூறிஉள்ளார். நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேதர்நாத்தில் கோவிலை சுற்றி பாதிக்கப்பட்ட இடங்களில் மேம்பாட்டு பணிகளை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்தேன், அப்போதைய மாநில அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முட்டுக்கட்டையிட்டது, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்தது, பின்னர் என்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்றார் பிரதமர் மோடி. 

நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் இறைவன் சிவன், தன்னுடைய மகனிடமே மறுசீரமைப்பு பணிகளை கொடுக்க முடிவு செய்து உள்ளார் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

Next Story