நீண்ட தொலைவு செல்லும் 500 ரெயில்களில் பயண நேரம் குறைக்கப்படுகிறது


நீண்ட தொலைவு செல்லும் 500 ரெயில்களில் பயண நேரம் குறைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 20 Oct 2017 12:28 PM GMT (Updated: 20 Oct 2017 12:28 PM GMT)

நாட்டில் நீண்ட தொலைவு செல்லும் 500 ரெயில்களின் பயண நேரத்தை 2 மணி நேரங்கள் வரையில் குறைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

புதுடெல்லி,

இதுதொடர்பான ரெயில்வே கால அட்டவணை நவம்பர் மாதம் வெளியிடப்படும் என ரெயில்வே மூத்த அதிகாரி கூறிஉள்ளார். 

இம்மாத தொடக்கத்தில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உத்தரவின்படி, புதிய ரெயில்வே அட்டவணையின்படி பிரபலமான ரெயில்களின் பயணத்தை நேரத்தை 15 நிமிடங்கள் முதல் 2 மணிவரையில் குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ரெயில்வே கால அட்டவணையானது ஒவ்வொரு ரெயில்வே பணிமனைக்கும் கொடுக்கப்படும், இதனால் இரண்டு முதல் நான்கு மணி வரையில் பராமரிப்பு பணிகளுக்கு நேரம் கிடைக்கும். ரெயில்களை அதிகப்படியாக பயன்படுத்தவும் எங்களுடைய திட்டம் உள்ளது. இதனை இரண்டு வழியில் செயல்படுத்தலாம், வேறு இடத்திற்கு திரும்பும் ரெயில் எங்காவது காத்திருந்தால், அவற்றை பயன்படுத்தாமல் வைத்திருக்காமல் பயன்படுத்தலாம். 

புதிய கால அட்டவணையின்படி இதுபோன்ற 50 ரெயில்கள் பயன்படுத்தப்படும். 51 ரெயில்களின் பயண கால நேரமானது ஒரு மணி முதல் 3 மணிவரையில் உடனடியாக குறையும். 500 ரெயில்கள் வரையில் இந்த பயண கால நேர குறைப்பு செல்லும் என ரெயில்வே அதிகாரி கூறிஉள்ளார். 

50 ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையாக தரம் உயர்த்த உள் தணிக்கையும் ரெயில்வே தரப்பில் தொடங்கிவிட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரெயில்களின் சராசரி வேகத்தை உயர்த்த ரெயில்வே நிர்வாகத்தின் செயல்பாட்டின் ஒருபகுதி இதுவாகும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். போபால் - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் இனி 95 நிமிடங்கள் முன்னதாக சேரும் இடத்திற்கு செல்லும். கவுகாத்தி - இந்தூர் சிறப்பு ரெயிலும் 2,330 கிலோ மீட்டர் பயணத்தை 115 நிமிடங்கள் முன்னதாக முடிக்கும். காஜிப்பூர்-பாந்த்ரா டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேரும் இடத்திற்கு 95 நிமிடங்கள் முன்னதாகவே செல்லும். ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்படும் நேரமும் குறைக்கவும் திட்டம் உள்ளது. போதிய அளவு பயணிகள் ஏறாத ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நிற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ரெயில்வே நிர்வாகம் அதற்கான மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Next Story