பள்ளியில் தங்கைக்காக போராடிய சிறுமிக்கு ஆசிரியர்கள் தொல்லை, மாடியில் இருந்து குதித்து தற்கொலை


பள்ளியில் தங்கைக்காக போராடிய சிறுமிக்கு ஆசிரியர்கள் தொல்லை, மாடியில் இருந்து குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2017 5:22 AM GMT (Updated: 23 Oct 2017 5:22 AM GMT)

பள்ளியில் ஆசிரியர்களால் தொல்லைக்கு உள்ளான 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.



கொல்லம்,


 
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்த மாணவி கவுரி. கவுரியின் 13 வயது தங்கை அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். கவுரியின் தங்கை வகுப்பறையில் அதிகமாக பேசும் பழக்கத்தை கொண்டு உள்ளார். இதனால் ஆசிரியர்கள் அவரை தண்டிப்பதும் வழக்கமாக இருந்து உள்ளது. கவுரியின் தங்கையை ஆசிரியர்கள் மாணவர்களுடன் இருக்க செய்து உள்ளனர். இதனால் கோபம் அடைந்த கவுரி, தன்னுடைய சகோதரியை மாணவர்களுடன் இருக்க செய்து அவமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 

இதனால் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு உள்ளார். தன்னுடைய சகோதரிக்கு கொடுக்கப்படும் தண்டனை எதற்கு? இதுபோன்று நடத்துவது ஏன்? என ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பி, வாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.  

இதனையடுத்து நடந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் கூறிஉள்ளார். அவர்களும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து உள்ளனர், இச்சம்பவம் தொடர்ந்தால் நாங்கள் போலீசிடம் செல்வோம் எனவும் கூறிஉள்ளனர். இதனையடுத்து இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என பள்ளி நிர்வாகம் வாக்குறுதி அளித்து உள்ளது. இதனையடுத்து கவுரிக்கும் ஆசிரியர்களிடம் இருந்தும், சக மாணவர்களிடம் இருந்தும் தொல்லை நேரிட்டு உள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கவுரி கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துவிட்டார். 

இதனால் படுகாயம் அடைந்த கவுரி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாணவி கவுரி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதற்கிடையே கவுரியை மதியம் சாப்பிட அனுமதிக்கவில்லை, அவரை தேர்வு எழுத விடமாட்டோம் என மிரட்டி உள்ளனர் என கவுரியின் தந்தை பிரகாஷ் குற்றம் சாட்டிஉள்ளார்.

 இவ்விவகாரம் தொடர்பாக இரு ஆசிரியர்களுக்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story