இந்திய மாணவியின் போட்டோவை மார்பிங் செய்து பொய் பிரசாரம் செய்த பாகிஸ்தானின் டுவிட்டர், பேஸ்புக் முடக்கம்


இந்திய மாணவியின் போட்டோவை மார்பிங் செய்து பொய் பிரசாரம் செய்த பாகிஸ்தானின் டுவிட்டர், பேஸ்புக் முடக்கம்
x
தினத்தந்தி 20 Nov 2017 9:00 AM GMT (Updated: 20 Nov 2017 9:00 AM GMT)

இந்திய மாணவியின் போட்டோவை மார்பிங் செய்து பொய் பிரசாரம் செய்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது.


புதுடெல்லி,


டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி கவல்பிரீத் கவுர் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு துணை நிற்பேன் என பிரசாரம் மேற்கொண்டார். மாணவி ஜமா மசூதி முன்னர் வாசகம் தாங்கிய பாதகையை ஏந்தியவாறு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். “நான் இந்தியாவின் குடிமகன், இந்திய அரசியலமைப்பின் மதசார்பின்மை மாண்புகளுக்கு நான் துணை நிற்கிறேன். நம்முடைய நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவாத கும்பல் தாக்குதலுக்கு எதிராக எழுதுவேன், #CitizensAgainstMobLynchng.” என்ற வாசகம் தாங்கிய பாதகையை ஏந்தியிருந்தார்.

 இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படத்தை பாகிஸ்தான் மார்பிங் செய்து உள்ளது. 

இந்திய மாணவி போட்டோவை மார்பிங் செய்து, இந்தியாவிற்கு எதிராக பொய்யாக பிரச்சாரம் செய்ய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் பயன்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் டுவிட்டர் மற்றம் பேஸ்புக் பக்கத்தில், இந்த போட்டோவை மார்பிங் செய்து, இந்தியாவை எனக்கு பிடிக்கவில்லை என்ற வாசகத்தை மாணவி கையில் ஏந்திருப்பது போல் வெளியிடப்பட்டது. இதையடுத்து பெரும் சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக ஜே.என்.யூ. மாணவ அமைப்பின் முன்னாள் துணை தலைவர் ராஷித் புகார் தெரிவித்தார். இதனையடுத்து டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்கை முடக்கியது.

இவ்விவகாரத்தில் மாணவி கவல்பிரீத் கவுரும் பாகிஸ்தானிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். நாடுகளில் வெறுப்பை பரப்புவதற்கு பாகிஸ்தான் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தினால், உண்மையான பாதுகாப்பு கவலையானது நீடிக்கிறது என கூறிஉள்ளார். இந்திய துணைக்கண்டத்தில் உள்ள மக்கள் அமைதியை மட்டும் விரும்புகிறார்கள், தீவிரவாதம் மற்றும் கும்பல் தாக்குதலை விரும்ப மாட்டார்கள் என அவர்கள் புரிந்துக் கொள்வார்கள் என நான் நம்புகின்றேன் எனவும் கவல்பிரீத் கவுர் குறிப்பிட்டு உள்ளார். 

Next Story