சபரிமலை கோவிலுக்குள் ஆண் போல் வேடமணிந்து நுழைய முயன்ற 15 வயது சிறுமி பிடிபட்டார்


சபரிமலை கோவிலுக்குள் ஆண் போல் வேடமணிந்து நுழைய முயன்ற 15 வயது சிறுமி பிடிபட்டார்
x
தினத்தந்தி 21 Nov 2017 8:22 AM GMT (Updated: 21 Nov 2017 8:37 AM GMT)

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் ஆண் போல் வேடமணிந்து செல்ல முயன்ற 15 வயது சிறுமியை கோவில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

சபரிமலை,

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.  நாடு முழுவதிலும் இருந்து இங்கு பக்தர்கள் வருவது வழக்கம்.  கடந்த ஞாயிற்று கிழமை ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்த 31 வயது நிறைந்த பெண் பக்தை ஒருவர் போலீசாரின் கண்காணிப்பினை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்றார். அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து 15 பேர் கொண்ட குழு ஒன்று கோவிலுக்கு சென்றுள்ளது. அவர்களை பம்பை பகுதியில் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் பெண்கள் சிறப்பு படை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டது.

தலையில் தொப்பி அணிந்து, கறுப்பு பேண்ட் மற்றும் முழுக்கை டி சர்ட் என ஆண் போல் உடையணிந்து அந்த குழுவுடன் சென்ற ஒரு சிறுமியை அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த கோவிலுக்குள் 10 முதல் 50 வயது உடைய பெண்கள் நுழைவதற்கு அனுமதியில்லை.


Next Story