தேசிய செய்திகள்

விவிஐபி சலுகை; மத்திய மந்திரிக்காக விமானம் தாமதம், பெண் டாக்டர் கடும் வாக்குவாதம்! + "||" + Passenger Confronts Tourism Minister KJ Alphons Over Flight Delay

விவிஐபி சலுகை; மத்திய மந்திரிக்காக விமானம் தாமதம், பெண் டாக்டர் கடும் வாக்குவாதம்!

விவிஐபி சலுகை; மத்திய மந்திரிக்காக விமானம் தாமதம், பெண் டாக்டர் கடும் வாக்குவாதம்!
விமான நிலையத்தில் மத்திய மந்திரி வருகைக்காக விமானம் தாமதிக்கப்பட்டதால் கடும் கோபம் அடைந்த பெண் டாக்டர் மத்திய மந்திரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இம்பால்,


மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தில் மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் வருகைக்காக விமான சேவையை தொடங்குவதில் கால தாமதம் செய்யப்பட்டு உள்ளது. காலதாமதம் காரணமாக நோயாளியை பார்க்க செல்ல விமானத்தில் பயணம் செய்ய வந்த பெண் டாக்டர் கடும் கோபம் கொண்டார். நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதை அடுத்து, மத்திய மந்திரி அல்போன்ஸ் வந்ததும் அவருடன் நேரடியாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் நோயாளியை பார்க்க வேண்டும், இவ்வாறு விஐபிக்காக காலதாமதம் செய்யப்பட்டால் என்ன செய்வது? என கேள்வியை கேட்டு உள்ளார். 

ஆக்ரோஷமாக அல்போன்ஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மருத்துவர், இனியும் விமானம் தாமதம் செய்யப்படாது என எழுதி கொடுங்கள் என கேட்டார். 

அல்போன்ஸ் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார், இதனை செய்வதற்கான அதிகாரி நான் கிடையாது என்கிறார். பதிலுக்கு பெண் டாக்டர் எழுத்துப்பூர்வமான தகவல் தெரிவிக்கப்பட்ட வேண்டும் என வலியுறுத்துகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெண் டாக்டரை பாராட்டியும், விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியும் சமூக வலைதள பயனாளர்கள் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.