குஜராத் 2-ம் கட்ட தேர்தல் நிறைவு: 62.24 % வாக்குகள் பதிவு


குஜராத் 2-ம் கட்ட தேர்தல்  நிறைவு:  62.24 % வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 14 Dec 2017 12:09 PM GMT (Updated: 14 Dec 2017 12:16 PM GMT)

குஜராத் மாநில சட்டசபையின் 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

அகமதாபாத்,

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 9–ந்தேதி நடந்தது. அதில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்த நிலையில் எஞ்சிய 93 தொகுதிகளுக்கு 2–வது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் இன்று காலை  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாலை 5 மணிவரை வாக்குபதிவு நடைபெற்றது. 

மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி  62.24 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் வரும் 18-ம் தேதி எண்ணப்படுகின்றன. 

Next Story