சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினம்:பிரதமர் மோடி அஞ்சலி


சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினம்:பிரதமர் மோடி அஞ்சலி
x
தினத்தந்தி 15 Dec 2017 5:11 AM GMT (Updated: 15 Dec 2017 5:12 AM GMT)

சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி மரணம் அடைந்தார். 
குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார்.  

 சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதம மந்திரியாகவும் உள்துறை மந்திரியாகவும் பணியாற்றினார். சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்.  ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது நினைவுநாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் நினைவுஅஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சர்தார் படேல் மறைந்த தினமான இன்று அவரை நாம் நினைவு கூர்வோம். ஒவ்வொரு இந்தியர்களும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

இவ்வாறு அதில் பதிவுட்டுள்ளார்.

Next Story