ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பா.ஜனதா அரசு ‘பிடிவாதமாக’ இருந்தது, எச்சரிக்கைகளை புறக்கணித்தது - தகவல்கள்


ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பா.ஜனதா அரசு ‘பிடிவாதமாக’ இருந்தது, எச்சரிக்கைகளை புறக்கணித்தது - தகவல்கள்
x
தினத்தந்தி 15 Dec 2017 1:36 PM GMT (Updated: 15 Dec 2017 1:35 PM GMT)

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பா.ஜனதா அரசு பிடிவாதமாக இருந்தது என்றும் அதுதொடர்பான எச்சரிக்கைகளை புறக்கணித்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கும் முறையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மத்திய அரசு ஜூலையில் அமல்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு நிலைகளில் விமர்சனங்களை எதிர்கொண்ட மத்திய அரசு பொருட்கள் மீதான வரிவிதிப்பில் மாற்றங்களை ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்துவதற்கு முன்னதாக வரிவிதிப்பை எளிதான முறையில் கொண்டு செல்ல தொழில்நுட்ப வசதிகள் செய்யப்படவில்லை என தனியார் நிறுவனங்களிடம் இருந்து சென்ற எச்சரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என, இத்திட்டத்தில் பணியாற்றிய பல்வேறு தரப்பினர் கூறிஉள்ளனர். 

ஜூலை ஒன்றாம் தேதிக்கு முன்னர் தொழில்துறை வல்லூனர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை எதிர்க்கொள்ள மாற்றங்களுக்கு கூடுதல் காலம் எடுக்கும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர் ஆனால் அரசு தயார் என அறிவித்துவிட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜூன் 20ம் தேதி மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், இது ஒன்றும் சிக்கலான பிரச்சனை கிடையாது என கூறியிருந்தார். 

இருப்பினும் இத்திட்டத்தில் பணியாற்றிய 10-க்கும் மேற்பட்ட வரிவிதிப்பு மற்றும் வருமான வரித்துறை நிபுணர்கள், திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்தது என கூறிஉள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் கட்டமைத்த ஜிஎஸ்டி தொழில்நுட்ப நெட்வோர்க்கில் அடிப்படை பிழைகள் இருந்தது, ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவதில் நேரிட்ட குறைபாடுகளில் அரசு அதிகாரிகள் ஏந்தஒரு பொறுப்பையும் ஏற்கவில்லை என தகவல்கள் தெரிவித்து உள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் இப்போது வரையில் அரசு மாற்றங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் பொருட்களுக்கான வரிவிதிப்பில் குறைப்பு செய்யப்பட்டாலும் பயனாளர்கள் பயனடையவில்லை எனவும் எம்ஆர்பி விதிமீறல் தொடர்பாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் ஜிஎஸ்டி நெட்வோர்க்கை நிர்வாகம் செய்யும் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ஜிஎஸ்டிஎன், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அமலுக்கு கொண்டுவருவது மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு தயாராகவில்லை என தொழில்துறையில் இருந்து கொடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பாக எந்தஒரு கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.


Next Story