ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் புதிய உயரத்தை எட்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்


ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் புதிய உயரத்தை எட்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
x
தினத்தந்தி 16 Dec 2017 6:54 AM GMT (Updated: 16 Dec 2017 6:54 AM GMT)

ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் புதிய உயரத்தை எட்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் 87-ஆவது தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 

ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:- காங்கிரசின் வரலாற்றில் இன்று முக்கியமான நாள். இது உணர்ச்சிமிக்க தருணமாக உள்ளது. சோனியா 19 வருடங்களாக கட்சியை சிறப்பாக வழி நடத்தினார். சோனியாவின் வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் 10ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தந்தது. 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் கட்சியை ராகுல் சிறப்பாக வழி நடத்துவார். இடையூறுகள் நிறைந்த தருணத்தில் ராகுல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். சிக்கல்களை ராகுல் காந்தி திறம்பட எதிர்கொள்வார். ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் புதிய உயரத்தை எட்டும். சோனியா காந்தி தலைமையின் கீழ் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.96% ஆக இருந்தது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story