கல்வி மற்றும் அறிவு மையம் ஆக ஆந்திர பிரதேசம் நிலை நிறுத்தப்பட வேண்டும்: சந்திரபாபு நாயுடு விருப்பம்


கல்வி மற்றும் அறிவு மையம் ஆக ஆந்திர பிரதேசம் நிலை நிறுத்தப்பட வேண்டும்:  சந்திரபாபு நாயுடு விருப்பம்
x
தினத்தந்தி 16 Dec 2017 2:15 PM GMT (Updated: 16 Dec 2017 1:47 PM GMT)

ஆந்திர பிரதேசத்தினை கல்வி மற்றும் அறிவு மையம் ஆக நிலை நிறுத்த மாநில அரசு விரும்புகிறது என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று பேசியுள்ளார்.

விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் நகரில் மனிதநலனுக்கான கல்வி உருமாற்ற மாநாடு 2017 என்ற மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது.  இதில் மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

கல்வியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்திய அவர் பேசும்பொழுது, கல்வி மிக அத்தியாசியம் ஆனது.  கல்வியின்றி மனிதனால் முன்னேற முடியாது.  அதனால் வறுமைக்கு பதிலாக பெற்றோர் அவர்களது குழந்தைகளுக்கு கல்வியை வழங்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒரு குழந்தை கல்வி அறிவு பெற்று விட்டால், கோடிக்கணக்கான வருவாயை ஈட்ட முடியும்.  மனித வளர்ச்சிக்கு கல்வி முக்கியம் என பேசியுள்ளார்.

அரசின் நிர்வாகத்தில் தொழில் நுட்பத்தினை பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறோம்.  அரசின் நோக்கம் கல்வி மற்றும் அறிவு மையம் ஆக ஆந்திர பிரதேசத்தினை நிலை நிறுத்துவதே.  இந்த சாதனையை படைப்பதற்காக தகவல் தொழில் நுட்பத்தினை பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறோம் என்றும் அவர் பேசியுள்ளார்.

வருகிற 2022ம் ஆண்டில் நாட்டின் சிறந்த 3 மாநிலங்களில் ஒன்றாக ஆந்திர பிரதேசத்தினை இடம் பெற செய்வது மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் முதல் இடம் பெறுவது என்பதே எனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story