விவேகானந்தர் மற்றும் நேதாஜியின் பிறந்த நாட்களை தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும்: மம்தா பானர்ஜி


விவேகானந்தர் மற்றும் நேதாஜியின் பிறந்த நாட்களை தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும்:  மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 20 Jan 2018 10:58 AM GMT (Updated: 20 Jan 2018 11:11 AM GMT)

விவேகானந்தர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரது பிறந்த நாட்களை தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.#Kolkata

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தேசிய மற்றும் சர்வதேச பிரபலங்கள்.

இந்திய அரசாங்கம் இருவரது பிறந்த நாட்களையும் தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை நான் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஜனவரி 12ந்தேதியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் ஜனவரி 23ந்தேதியும் வருகிறது.

#Kolkata #holiday #MamataBanerjee


Next Story