ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு


ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள்  விடுதலை தொடர்பாக  சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 23 Jan 2018 6:40 AM GMT (Updated: 23 Jan 2018 6:40 AM GMT)

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதம் மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கெடு விதித்து உள்ளது. #RajivGandhi #SupremeCourt

புதுடெல்லி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. 7  பேரை விடுதலை செய்ய முடிவெடுத்து மத்திய அரசின் கருத்தை கேட்டு 2016 ஆம் ஆண்டு இரண்டாம் கடிதம் எழுதியிருந்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தது.

இந்த விசாரணையில் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதற்கிடையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தங்களை விடுவிக்குமாறு, தண்டனை பெற்றுள்ள 7 பேரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ராஜீவ் கொலை வழக்கின் இறுதி விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பது குறித்து, 6 வாரத்தில்  முடிவெடுக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்களை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

Next Story