பிவண்டியில் பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து 4 பேர் பலி; 2 பேர் படுகாயம்


பிவண்டியில் பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து 4 பேர் பலி; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Feb 2017 10:30 PM GMT (Updated: 19 Feb 2017 8:25 PM GMT)

பிவண்டியில் பிளாஸ்டிக் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலி ஆனார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தானே,

பிவண்டியில் பிளாஸ்டிக் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலி ஆனார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து

தானே மாவட்டம் பிவண்டி, தபோடா கிராமப்பகுதியில் தெடியா என்ற பிளாஸ்டிக் கம்பெனி அமைந்துள்ளது. இந்த கம்பெனியில் நேற்று மதியம் வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். மதியம் திடீரென கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து கம்பெனிக்குள் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். சிலர் வெளியே செல்ல முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதனிடையே தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

பிளாஸ்டிக் கம்பெனி என்பதால் விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமானது.

4 பேர் பலி

தகவல் அறிந்து பிவண்டி, தானே மற்றும் கல்யாணில் இருந்து தீயணைப்புப்படை வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து வந்து, கம்பெனிக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். எனினும் இந்த விபத்தில் 4 பேர் தீக்காயம் அடைந்தும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக ஐரோலியில் உள்ள தீக்காய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பிளாஸ்டிக் கம்பெனியில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்து குறித்து பிவண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story