கனத்த இதயத்தோடுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது; பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் | திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் - அதிமுக.. | பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், அருப்புக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் | விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்பை புறக்கணித்து போராட்டம் | தற்போது நடக்கும் அதிமுக அரசை, யாராலும் அசைக்க முடியாது - நடிகர் ராமராஜன் | மாவட்டந்தோறும் ரஜினி மன்றத்துக்கு மகளிர் அணி தலைவி |

மாவட்ட செய்திகள்

விவசாயிகள் மீண்டும் பயிர்க்கடன் பெறுவதில் பிரச்சினை இல்லை + "||" + There is no problem of farmers getting back with crops

விவசாயிகள் மீண்டும் பயிர்க்கடன் பெறுவதில் பிரச்சினை இல்லை

விவசாயிகள் மீண்டும் பயிர்க்கடன் பெறுவதில் பிரச்சினை இல்லை
வங்கி கடன் மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் பயிர்க்கடன் பெறுவதில் பிரச்சினை இல்லை என்று சட்டசபையில் மந்திரி தீபக் கேசர்கர் அறிவித்தார்.

மும்பை,

பர்பானியை சேர்ந்த சர்க்கரை ஆலை நிறுவனம் ஒன்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் ஒப்புதல் இன்றி, அவர்களது பெயரில் பல்வேறு வங்கிகளில் ரூ.328 கோடி கடன் பெற்று மோசடி செய்தது.

இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் கேடர், குறிப்பிட்ட அந்த சர்க்கரை ஆலை மீதும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதற்கு உள்துறை இணை மந்திரி தீபக் கேசர்கர் பதில் அளிக்கையில், ‘‘வங்கி கடன் மோசடியில் விவசாயிகளின் பெயர் அடிபட்டாலும், அவர்கள் மீண்டும் பயிர்க்கடன் பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. வங்கி ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.