ஆசிய பேட்மிண்டன் போட்டி கால்இறுதியில் சிந்து தோல்வி


ஆசிய பேட்மிண்டன் போட்டி கால்இறுதியில் சிந்து தோல்வி
x
தினத்தந்தி 28 April 2017 2:13 PM GMT (Updated: 28 April 2017 2:13 PM GMT)

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

வுஹான்,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 3–வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 7–வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை ஹீ பிஞ்ஜியாவை சந்தித்தார். 1 மணி 17 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிந்து 15–21, 21–14, 22–24 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி கண்டார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. 

Next Story