மாவட்ட செய்திகள்
வாலிபர் உடலை வாங்க மறுத்து 4–வது நாளாக உறவினர்கள் போராட்டம்

வாலிபர் உடலை வாங்க மறுத்து 4–வது நாளாக உறவினர்கள் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபு சமுத்திரம் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சதீஷ் (வயது 23) சம்பவத்தன்று அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் மின்கம்பம் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்மநபர்கள் ச

கண்டமங்கலம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபு சமுத்திரம் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சதீஷ் (வயது 23) சம்பவத்தன்று அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் மின்கம்பம் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த மர்மநபர்கள் சிலர் சதீஷ் அணிந்து இருந்த லுங்கியால் அவரது முகத்தை மூடி சரமாரியாக தாக்கி, தீ வைத்துவிட்டு, தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

உடலில் தீக்காயம் அடைந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சதீஷ் சிகிச்சை பலனின்றி கடந்த 6–ந் தேதி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சதீசின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால்தான், அவரது உடலை வாங்குவோம் என்று சதீசின் உறவினர்கள் சாலைமறியல், போலீஸ் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சதீஷின் உடல் நேற்று முன்தினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும் சதீஷ் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால்தான் அவரது உடலை வாங்குவோம் என்ற நேற்று 4–வது நாளாக சதீஷின் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பெரியபாபு சமுத்திரம் கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.