கனத்த இதயத்தோடுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது; பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் | திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் - அதிமுக.. | பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், அருப்புக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் | விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்பை புறக்கணித்து போராட்டம் | தற்போது நடக்கும் அதிமுக அரசை, யாராலும் அசைக்க முடியாது - நடிகர் ராமராஜன் | மாவட்டந்தோறும் ரஜினி மன்றத்துக்கு மகளிர் அணி தலைவி |

மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்து விட்டு தப்பிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த திருடன் + "||" + Motorcycle Thief who fell from the wrong

பெண்ணிடம் நகை பறித்து விட்டு தப்பிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த திருடன்

பெண்ணிடம் நகை பறித்து விட்டு தப்பிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த திருடன்
பெண்ணிடம் நகை பறித்து விட்டு தப்பிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த திருடனை பிடித்து பொதுமக்கள்தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் மடுகரையை சேர்ந்தவர் மணி (வயது 38) டிரைவர். இவர் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த தனது அக்காள் விஜயலட்சுமியுடன் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை காளியம்மன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினர்.

பிள்ளையார்குப்பம்– பத்துக்கண்ணு இடையே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று முந்திக் கொண்டு சென்று விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்து விஜயலட்சுமியும், மணியும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

வாலிபர் கைது

தாலிச்சங்கிலியை பறித்த ஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். உடனே மணியும், அந்த வழியாக வந்தவர்களும் அந்த ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்–இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் செல்லிப்பட்டு கிராமம் தனம் நகரை சேர்ந்த ராஜா என்ற இளையராஜா (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து 3 பவுன் தாலிச்சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.