மாநில செய்திகள்

அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கு: டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு + "||" + Dr. krishnasamy Supreme Court notice

அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கு: டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கு: டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக அரசு அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவின் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த ஜே.யசோதா எ

புதுடெல்லி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக அரசு அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவின் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த ஜே.யசோதா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நோட்டீசு அனுப்பவும், இதேபோன்ற பஞ்சாப் மற்றும் அரியானா மாநில வழக்குடன் சேர்த்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும், வழக்கின் விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.