மாநில செய்திகள்

மத்திய பல்கலைக்கழக கட்டிட விபத்து: ரூ.5 லட்சம் இழப்பீடு; சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு + "||" + Tamil Nadu to pay Rs.5 lakh to building collapse victims' kin

மத்திய பல்கலைக்கழக கட்டிட விபத்து: ரூ.5 லட்சம் இழப்பீடு; சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

மத்திய பல்கலைக்கழக கட்டிட விபத்து: ரூ.5 லட்சம் இழப்பீடு; சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
கட்டிட இடிபாட்டில் சிக்கிய 21 பேர் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 தொழிலாளர்களுக்கு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை,

மத்திய பல்கலைக்கழக கட்டிட விபத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விபத்து

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்து குறித்து கவன ஈர்ப்பை கொடுத்திருந்தனர். இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், நாகக்குடி வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழக வளாகத்தில், மத்திய பொதுப்பணித் துறை சார்பில் விருந்தினர் மாளிகை கட்டிட கட்டுமானப்பணி நடந்து வருகிறது.

29.3.2015 அன்று காலை சுமார் 9 மணியளவில், விருந்தினர் மாளிகைக்கான கட்டிடத்தில், மூன்றாம் தளத்தில், மேற்கூரை கான்கீரிட் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அந்தக்கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 21 பணியாளர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

4 பேர் கைது

கட்டிட இடிபாட்டில் சிக்கிய 21 பேர் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 தொழிலாளர்களுக்கு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, சன்னாநல்லூர் வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், நன்னிலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவன மேலாளர் மற்றும் களப் பொறியாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.5 லட்சம்

இந்த விபத்தில் பலியான இருவர் ஒடிசா மாநிலத்தையும், ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலத்தையும், சேர்ந்தவர்களாவர். இரண்டு தொழிலாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 16 பேருக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாராணத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.