மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. கணிதத் தேர்வு சற்று கடினமாக இருந்தது; மாணவ-மாணவிகள் கருத்து + "||" + SSLC Mathematics paper tough for average students

எஸ்.எஸ்.எல்.சி. கணிதத் தேர்வு சற்று கடினமாக இருந்தது; மாணவ-மாணவிகள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. கணிதத் தேர்வு சற்று கடினமாக இருந்தது; மாணவ-மாணவிகள் கருத்து
கணிதத்தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. கட்டாய விடை அளிக்கக்கூடிய 30-வது கேள்வியும், 45-வது கேள்வியும் சிரமமாக இருந்தன. 34-வது கேள்வி புரியாமல் இருந்தது. பல முறை படித்த பின்னர்தான் புரிந்தது. ஆனால் அனைத்து கேள்விகளும் பாடத்தில் இருந்துதான் கேட்கப்பட்டிருந்தன. ஆனால் சற்று கடினமாக இருந்தன. வரை படம் பற்றிய கேள்வி கஷ்டப்பட்டு தான் எழுதமுடிந்தது.
சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. கணிதத் தேர்வு நேற்று நடந்தது. தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

கணிதத்தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு, கடந்த 19-ந்தேதி தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. பின்னர் தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல்தாள், ஆங்கிலம் 2-வது தாள் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.

நேற்று கணிதத்தேர்வு நடைபெற்றது. பகல் 12 மணிக்கு தேர்வு முடிந்தது. சென்னை வேப்பேரி பென்டிங்க் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் அந்த பள்ளி மாணவிகள், மற்றும் வேப்பேரி செயிண்ட் மத்தியாஸ் பள்ளி, சால்வேசன் ஆர்மி பள்ளி மாணவர்கள், பட்டாளம் கிறிஸ்டியன் பள்ளி மாணவர் கள், சில பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்களில் சில மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

சற்று கடினம்

கணிதத்தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. கட்டாய விடை அளிக்கக்கூடிய 30-வது கேள்வியும், 45-வது கேள்வியும் சிரமமாக இருந்தன. 34-வது கேள்வி புரியாமல் இருந்தது. பல முறை படித்த பின்னர்தான் புரிந்தது. ஆனால் அனைத்து கேள்விகளும் பாடத்தில் இருந்துதான் கேட்கப்பட்டிருந்தன. ஆனால் சற்று கடினமாக இருந்தன. வரை படம் பற்றிய கேள்வி கஷ்டப்பட்டு தான் எழுதமுடிந்தது.

47-வது கேள்வி புத்தகத்தில் உள்ளபடி அப்படியே கேட்கப்பட்டிருந்தது. அதனால் அது எளிதாக இருந்தது.

இவ்வாறு மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

6-ந்தேதி அறிவியல் தேர்வும், 10-ந்தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளன. 10-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.

பிளஸ்-2 தேர்வுஇன்று முடிவடைகிறது

பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரியியல் தேர்வுடன் முடிகிறது.