மாநில செய்திகள்

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்; 65 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் + "||" + DMK treasurer MK Stalin meet over 5 thousand in 8 days

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்; 65 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்; 65 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை, அதற்குரிய இளைஞர் அணி தோழர்களை, கடந்த ஏப்ரல் 13-ந்தேதியில் இருந்து, 18-ந்தேதி வரை, ஏறக்குறைய 8 நாட்கள், காலையில் 4 முதல் 4½ மணி நேரம், மாலையில் 4½ மணி நேரம் என அன்பகத்துக்கு அவர்களை அழைத்து, நேர்காணலை தொடர்ந்து நடத்தி, அந்த நேர்காணலின் போது, ஏற்கனவே இருக்கக்கூடிய நிர்வாகிகளாக இருந்தால், அவர்கள் ஆற்றி இருக்கக்கூடிய பணிகள், அவர்களுடைய குடும்ப சூழ்நிலை, குடும்பத்தில் யாராவது கழகத்தில் பொறுப்பில் இருக்கிறார்களா? என்கிற அந்தப் பின்னணி, அவர்களின் கல்வி போன்ற பல கேள்விகளைக் கேட்டு அந்த நேர்காணலை இப்போது நாங்கள் முடித்திருக்கிறோம்.
சென்னை,

இளைஞர் அணி நேர்காணல் நடந்த 8 நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். இதில் 65 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளையும் நியமனம் செய்துள்ளார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

வன்மையாக கண்டிக்கிறேன்

கேள்வி:- சத்துணவு ஊழியர் போராட்டத்தில் தாக்கப்பட்டுள்ளதை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் 4-ம் நாளாக வேலைநிறுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். கல்வி தகுதிக்கு ஏற்ற ஊதியம், பணிநிரந்தரம், காலிபணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் அளிப்பது, பணிச்சுமை குறைப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராடிவருகிறார்கள்.

சம்பந்தப்பட்ட சமூகநலத்துறை அமைச்சரிடம் பிப்ரவரி மாதமே முறையிட்டும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்படவில்லை. 2011 தேர்தல் அறிக்கையில் சத்துணவு பணியாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் மற்ற வாக்குறுதிகள் போல் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறியதோடு மட்டுமின்றி சத்துணவு பணியாளர்கள் வேலை நிறுத்தமே தேவை இல்லை என்று அ.தி.மு.க. அரசு கூறி வருகிறது.

இந்தநிலையில் அவர்கள் தாக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். சத்துணவு பணியாளர்களின் போராட்டம் மற்றும் கோரிக்கைகளை ஆதரிக்கும் அதேசமயம் அவர்களை அரசு அழைத்துப்பேசி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இளைஞர் அணி நேர்காணல்

கேள்வி:- இளைஞர் அணி நேர்காணல் முடிந்து விட்டதா?

பதில்:- கடந்த மார்ச் 31-ந்தேதி வரையிலே விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த பொறுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள். அதில், சில விதிமுறைகளையெல்லாம், இளைஞர் அணியைப் பொறுத்தவரை நாங்கள் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, 40 வயதுக்கு உட்பட்டவர்களை தேர்ந்தெடுக்க இந்த விதிமுறைகளை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வருகிறோம்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை, அதற்குரிய இளைஞர் அணி தோழர்களை, கடந்த ஏப்ரல் 13-ந்தேதியில் இருந்து, 18-ந்தேதி வரை, ஏறக்குறைய 8 நாட்கள், காலையில் 4 முதல் 4½ மணி நேரம், மாலையில் 4½ மணி நேரம் என அன்பகத்துக்கு அவர்களை அழைத்து, நேர்காணலை தொடர்ந்து நடத்தி, அந்த நேர்காணலின் போது, ஏற்கனவே இருக்கக்கூடிய நிர்வாகிகளாக இருந்தால், அவர்கள் ஆற்றி இருக்கக்கூடிய பணிகள், அவர்களுடைய குடும்ப சூழ்நிலை, குடும்பத்தில் யாராவது கழகத்தில் பொறுப்பில் இருக்கிறார்களா? என்கிற அந்தப் பின்னணி, அவர்களின் கல்வி போன்ற பல கேள்விகளைக் கேட்டு அந்த நேர்காணலை இப்போது நாங்கள் முடித்திருக்கிறோம்.

விரைவில் பட்டியல்...

இந்த நேர்காணலைப் பொறுத்தவரையில் பங்கேற்றிருக்க கூடியவர்கள், இளநிலை பட்டதாரிகள் 805 பேர்களும், முதுநிலைப் பட்டதாரிகள் 333 பேர்களும், மருத்துவர்கள் 14 பேர்களும், வக்கீல்கள் 288 பேர்களும், தொழிற்கல்வி பயின்றிருக்க கூடியவர்கள் 1,273 பேர்களும் என்பது சிறப்புக்குரிய ஒன்று.

ஆக, அப்படிப்பட்ட நண்பர்களை நாங்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி, மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகளை தேர்வு செய்து, அதை முறையோடு தலைமைக்கழகத்திடம் ஒப்புதல் பெற்று, குறிப்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோரிடம் அனுமதி பெற்று விரைவில் அந்தப் பட்டியல் வெளியிடப்படவிருக்கிறது.

மாவட்ட அளவில் நிர்வாகிகள் வெளியிடப்பட்ட பிறகு, 65 மாவட்டங்களுக்கு உரிய 574 ஒன்றியங்களுக்கும், 131 நகரங்களுக்கும், 536 பேரூர்களுக்கும், மாநகரங்களில் இருக்கக்கூடிய பகுதிக்கழகங்கள் 130 பகுதிகளுக்கும் விரைவில் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

5 ஆயிரம் பேர்

இதில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றிருக்கிறார்கள் என்று சொன்னால், மாவட்டத்துக்கு 5 பேர் வீதம் தான் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மிச்சம் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் ஏதோ அவர்களுக்கு தகுதி இல்லை என்ற காரணத்தால் ஒதுக்கப்படுகிறார்கள் என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை.

அவர்களைப் பொறுத்தவரை மாணவர் அணி, தொண்டர் அணி, வக்கீல் அணி, மருத்துவர் அணி போன்ற பல்வேறு அணிகள் நம்முடைய கழகத்தினுடைய துணை அமைப்புகளாக இருக்கின்றன. எனவே, அந்த அணிகளுக்கு நிச்சயமாக, இந்த நேர்காணலில் பங்கேற்றவர்களில் 90, 95 சதவீதம் பேர் அந்தப் பொறுப்பையும் ஏற்க இருக்கிறார்கள் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.