மாநில செய்திகள்

ஜெயலலிதாவுடன் மதுரை ஆதீனம் சந்திப்பு; சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார் + "||" + Madurai Aadinam meets jayalalitha extends support for assembly polls

ஜெயலலிதாவுடன் மதுரை ஆதீனம் சந்திப்பு; சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்

ஜெயலலிதாவுடன் மதுரை ஆதீனம் சந்திப்பு; சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது மதுரை ஆதீனத்துடன், இளைய ஆதீனம் மற்றும் ஆதீனத்தின் முதன்மை செயலாளர் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னை,

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மதுரை ஆதீனம் நேற்று சந்தித்தார். அப்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவுடன் சந்திப்பு

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல் 16.5.2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை, மதுரை ஆதீனம் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.வுக்கு தமது மனப்பூர்வமான ஆதரவை தெரிவித்ததோடு, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது மதுரை ஆதீனத்துடன், இளைய ஆதீனம் மற்றும் ஆதீனத்தின் முதன்மை செயலாளர் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தபின், மதுரை ஆதீனம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள், எப்போதில் இருந்து பிரசாரம் செய்ய இருக்கிறீர்கள்?

பதில்:- அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். எங்களுடைய பிரசாரம் மேடை பிரசாரமாக இருக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சொல்வது படி நாங்கள் பிரசாரம் செய்வோம்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- நிச்சயமாக அவர் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

பூஜை, தியானம்...

கேள்வி:- ஆதீனம் சார்பாக ஜெயலலிதா வெற்றி பெறுவதற்கு யாகங்கள் ஏதாவது நடத்தப்படுமா?

பதில்:- சிறப்பு யாகம் என்ற திட்டம் எதுவுமில்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்காக தினமும் பூஜை, தியானம் செய்து வருகிறோம்.

கேள்வி:- நித்யானந்தாவை பற்றி ஒரு கேள்வி கேட்கலாமா?

பதில்:- நித்யானந்தா முடிந்து போன கதை. அதை பற்றி பேச ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.