மாநில செய்திகள்

மனநல மருத்துவர் எம்.சாரதா மேனனுக்கு ‘அவ்வையார்’ விருது ஜெயலலிதா வழங்கினார் + "||" + Menon emcarata psychiatrist 'avvaiyar' award presented Jayalalithaa

மனநல மருத்துவர் எம்.சாரதா மேனனுக்கு ‘அவ்வையார்’ விருது ஜெயலலிதா வழங்கினார்

மனநல மருத்துவர் எம்.சாரதா மேனனுக்கு ‘அவ்வையார்’ விருது ஜெயலலிதா வழங்கினார்
மனநல மருத்துவர் சாரதா மேனனுக்கு ‘அவ்வையார்’ விருதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– ரூ.1 லட்சம் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை,

சென்னை,

மனநல மருத்துவர் சாரதா மேனனுக்கு ‘அவ்வையார்’ விருதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ரூ.1 லட்சம்

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கவுரவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு அந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘அவ்வையார்’ விருது என்ற உயரிய விருது வழங்கப்படும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

முதல் பெண் மனநல மருத்துவர்

அதன்படி 2012–ம் ஆண்டு முதல் ‘அவ்வையார்’ விருது, மகளிர் தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் எம்.சாரதா மேனன், 3 ஆண்டுகள் பயில வேண்டிய மனோதத்துவ நிபுணர் படிப்பை 2 ஆண்டுகளில் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் முடித்து, சென்னை மருத்துவ கல்லூரியில் முதுகலை பட்டம் (எம்.டி.) பெற்றுள்ளார்.

டாக்டர் எம்.சாரதா மேனன் நாட்டிலேயே முதல் பெண் மனநல மருத்துவரும், பத்ம பூஷண் விருது உள்பட பல விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். 1961–ம் ஆண்டு சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த்தில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்து, அவரது தலைமையில் மருத்துவமனையின் ஆய்வு கூடம், கட்டிட அமைப்புகளை மேம்படுத்தி, ‘ஆக்குபேஷன் தெரபி யுனிட்’–ஐ சீர்செய்து நோயாளிகளுக்கு புதிய தொழிற்பயிற்சி அளித்துள்ளார்.

தொழில் பயிற்சி

மேலும், அவர் நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் விளையாட்டு தினம் நடத்தியதோடு, மனநோயாளிகள் செய்யும் கைவினைப் பொருட்களை கண்காட்சியில் வைத்து, அதன்மூலம் மருத்துவமனைக்கு நிதி திரட்டியுள்ளார்.

மனநோயாளிகளின் நல்வாழ்விற்காக 1984–ம் ஆண்டு ஸ்கார்ப் என்ற தொண்டு நிறுவனத்தை டாக்டர் எம்.சாரதா மேனன் தொடங்கி, மனநோயாளிகளுக்கு தற்காலிக தங்கும் இடவசதி, மேம்படுத்தப்பட்ட மனநல சிகிச்சை முறைகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி அளித்து வருகிறார்.

கவுரவித்தார்

2016–ம் ஆண்டுக்கான ‘அவ்வையார்’ விருதுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் எம்.சாரதா மேனனுக்கு, அவரது சிறந்த சமூக சேவையினை பாராட்டி அவ்வையார் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் கடந்த 2.3.16 அன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, டாக்டர் சாரதா மேனனுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ‘அவ்வையார்’ விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

ஜெயலலிதாவின் தாராள குணம்

அப்போது டாக்டர் எம்.சாரதா மேனன் பேசியதாவது:–

உங்களின் எண்ணங்கள், ஆசைகள், பணிகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் இந்த அவ்வையார் விருது பெறுவதற்கு என்னை பரிசீலித்ததற்காக மிகுந்த நன்றியுடையவராக இருப்பேன். எனக்கு கிடைத்துள்ள கொஞ்ச காலம் முழுவதும் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்க வாழ முயற்சிப்பேன்.

மனநலன் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சேவை அளிப்பதில் நீங்கள் மிகுந்த ஆர்வம், ஆதரவு, உதவிக்கரம் நீட்டுகிறவராக இருக்கிறீர்கள். ஸ்கார்ப் இந்தியா அமைப்புக்கு 1995–ம் ஆண்டு நீங்கள் அளித்த ஆதரவும், உதவியும் எனது நினைவில் உள்ளது. அது தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளுக்கு இணையாக மனநிலை பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கப்படவேண்டும் என்று அறிவித்தீர்கள்.

அதிலிருந்துதான் அதிர்ஷ்டமில்லாத இந்த சிறிய பிரிவினருக்கு சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மனநலன் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அந்த குடும்பத்தினருக்கான நல்ல எதிர்காலம், சமுதாயத்துக்கு நல்ல சேவை போன்றவை தொடர்ந்து கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கைக்கு, உங்களது தாராளகுணம், பரிவு போன்றவை ஆதாரமாக உள்ளன.  இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் பா.ராம மோகன ராவ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளர் க.மணிவாசன், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஆணையர் வி.எம்.சேவியர் கிறிசோ நாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.