மாநில செய்திகள்

பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு: காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரித்தால் டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும் அபாயம் விஞ்ஞானிகள் பேட்டி + "||" + The explosion in the Earth's magnetosphere

பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு: காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரித்தால் டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும் அபாயம் விஞ்ஞானிகள் பேட்டி

பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு: காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரித்தால் டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும் அபாயம் விஞ்ஞானிகள் பேட்டி
பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரித்தால் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.
நீலகிரி

பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரித்தால் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.

ஆராய்ச்சி மையம் 

ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் காஸ்மிக் கதிர்கள் ஆராய்ச்சி மையம் அமைந்து உள்ளது. இந்த மையம் சார்பில் விண்வெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர் வீச்சு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. காஸ்மிக் கதிர்கள் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.கே. குப்தா, மூத்த விஞ்ஞானி அதுல் ஜெயின் மற்றும் விஞ்ஞானிகள் நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

சூரியனிடம் இருந்து நாள்தோறும் ஏராளமான துகள்கள், கதிர்கள் வெளிப்பட்டு பூமியை நோக்கி வருகின்றன. இந்த துகள்களிடம் இருந்தும், கதிர்களிடம் இருந்தும் பூமியை, காந்தப்புலங்கள்தான் பாதுகாக்கிறது. இதில் ஒரு சில துகள்கள் வினாடிக்கு 500 கிலோ மீட்டர் முதல் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து பூமியை வந்தடைகிறது.

சூரிய புயல் 

2015–ம் ஆண்டு ஜூன் மாதம் 22–ந் தேதி நள்ளிரவில் பூமிக்கு வந்த காஸ்மிக் கதிர்களின் அளவு 0.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்ந்தது. இதற்கான காரணம் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போது சூரிய புயல் காரணமாக பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. கிரேப்ஸ்–3 மியோன் என்ற தொலைநோக்கி மூலம் அகண்ட கதிர் வெடிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

சுமார் 2 மணி நேரம் நீடித்த காந்தப்புல வெடிப்பால், சூரியனிடமிருந்து வெளிப்படும் மின்னாற்றப்பட்ட துகள்கள் 40 நனோ டெஸ்லா (கதிர்வீச்சு அளவு) அளவிற்கு பூமிக்கு வந்துள்ளன. இது மற்ற நேரங்களில் 2 முதல் 3 நனோ டெஸ்லாவாக இருக்கும். இதுபோன்ற துகள்கள் அதிக எண்ணிக்கையில் பூமியை வந்தடையும் போது, பூமியின் காந்தப்புலத்தோடு மோதி மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறும் அபாயம் 

பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காஸ்மிக் கதிர்வீச்சு அளவு அதிகரித்து, இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் பூமியில் நாம் அமைத்து உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அனைத்தும் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. மேலும் மின் உற்பத்தி நிலையங்களும் வெடித்து அழிவை ஏற்படுத்துவதோடு, செயற்கை கோள்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் பலத்த சேதமடையும். இதனால் நமது தொழில்நுட்பங்கள் அழியும் நிலை ஏற்படலாம்.

இதுபோன்ற கதிர்வீச்சுகளை முன்கூட்டியே கண்டறிந்து, மேற்கண்ட அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும். குறிப்பாக இதுபோன்ற மின்னாற்றப்பட்ட துகள்கள் அதிகளவு பூமியில் மோதும்போது உயரமான பகுதிகளில் அமைந்துள்ள கனடா, நார்வே, சுவீடன், வட அமெரிக்கா மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகும்.

தொழில்நுட்பங்கள் 

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் காஸ்மிக் கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்தப்பட்டாலும், பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு ஏற்பட்டதை ஊட்டி விஞ்ஞானிகள் தான் கண்டு பிடித்துள்ளனர். இதே போன்று கடந்த 1859–ம் ஆண்டு காந்தப்புலத்தில் வெடிப்பு ஏற்பட்டு மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. அப்போது தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர்களை மின்சாரம் தாக்கி உள்ளது. ஆனால் அந்த காலக்கட்டத்தில் தற்போது உள்ள அளவுக்கு தொழில்நுட்பங்கள் இல்லாததால் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.